ஹாலிவுட் நடிகர் அர்னால்ட் ஸ்வார்ஸ்னேக்கர் மற்றும் பத்திரிகையாளர் மரியா ஷிவர் இருவரும் விவாகரத்து பெற்றனர்.
அர்னால்டு மற்றும் மரியா 1986 இல் திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதிக்கு கேத்தரின், கிறிஸ்டினா, பேட்ரிக் மற்றும் கிறிஸ்டோபர் என நான்கு குழந்தைகள் உள்ளனர். இவர்கள் கடந்த 2011ம் ஆண்டு முதல் இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தனர். குழந்தைகளின் உரிமைகள் கோரல் தொடர்பான இருவருக்கு இடையே நிதி தகராறு காரணமாக விவாகரத்து வழக்கு பத்து ஆண்டுகள் நீடித்தது.
நான்கு குழந்தைகளும் தற்போது பெரியவர்களாகிவிட்டனர். இனி இதனை காரணம் காட்ட முடியாது என்ற நிலையில், அவர்களுடையே நிதி சிக்கல்களும் தீர்க்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், விவாகரத்துக்காக நீதிமன்றத்தை அணுகிய பிறகு, அர்னால்ட் தனக்கு வீட்டுப் பணிப்பெண்ணுடன் ஏற்பட்ட பழக்கத்தின் மூலம் ஒரு மகன் இருப்பதை வெளிப்படுத்தியுள்ளார்.