தமிழில் கனகவேல் காக்க, வல்லக்கோட்டை மற்றும் முரண் போன்ற படங்களில் நடித்தவர் கன்னட நடிகை ஹரிப்ரியா. அதன்பிறகு தமிழில் படவாய்ப்புகள் இல்லை என்பதால் மீண்டும் கன்னடத்திற்கே சென்றுவிட்டார். இந்நிலையில் தற்போது தமிழில் கழுகு புகழ் சத்ய சிவா இயக்கும் புதிய படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக ஹரிப்ரியா ஒப்பந்தம் செய்துள்ளார். அவ்வகையில் பத்து வருடங்கள் கழித்து மீண்டும் தமிழில் ரீ என்ட்ரி கொடுக்கிறார் ஹரிப்ரியா. இந்தப் படத்தில் சசிகுமார்-ஹரிப்ரியா உடன் விக்ராந்த், துளசி ஆகியோரும் முக்கிய வேடத்தில் நடிக்க, பிரசன்னா இசை அமைக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது.
Categories
10 ஆண்டுகளுக்கு பிறகு…. தமிழில் ரீ-என்ட்ரி கொடுக்கும் கன்னட நடிகை….!!!!
