Categories
மாநில செய்திகள்

10ஆம் தேதி முதல் தமிழகத்தில்… திரையரங்கு சங்கம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் திரையரங்குகள் வருகின்ற 10ம் தேதி முதல் திறக்கப்படும் என்று தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கத் தலைவர் கூறியுள்ளார்.

தமிழகத்தில் உள்ள திரையரங்குகள் அனைத்தும் வருகின்ற 10ம் தேதி முதல் திறக்கப்படும் என்று தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம் கூறியுள்ளார். தாங்கள் வைத்துள்ள திரைப் படங்களை திரையிடுவதற்கு முடிவு செய்து இருப்பதாக அவர் கூறினார்.

விபிஎப் கட்டணம் பற்றி திரையரங்கு உரிமையாளர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் இடையே பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கும் நிலையில், இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. நாளை அல்லது அதற்கு மறுநாள் தயாரிப்பாளர்கள் ஒரு நல்ல முடிவை கூறுவார்கள் என்ற நம்பிக்கையுடன் 10-ஆம் தேதி முதல் திரையரங்குகளை திறக்க உள்ளதாக திருப்பூர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |