இந்தியில் முன்னணி கதாநாயகனாக உள்ள அமீர்கான் நடிப்பில் வெளியாகிய “லால் சிங் சத்தா” திரைப்படம் படுதோல்வியடைந்தது. ரூபாய்.180 கோடி செலவில் தயாராகிய இப்படம் ரூ.38 கோடி மட்டுமே வசூலித்ததாக கூறப்பட்டது. லால்சிங் சத்தா வெளியாகுவதற்கு முன்னதாகவே அதனை புறக்கணிக்கும்படி சமூகவலைத்தளத்தில் பலரும் வற்புறுத்தினர். இந்த படத்தின் தோல்வியால் அமீர்கான் அதிர்ச்சியடைந்தார். அவர் நடிக்கயிருந்த புது படங்களுக்கு கால்ஷீட் கொடுக்க மறுத்தார். மேலும் சில காலம் திரையுலகை விட்டு ஒதுங்கி இருக்கப்போவதாக அவர் அறிவித்தார்.
இந்நிலையில் ஒரு வருடத்துக்கு பின் மீண்டுமாக நடிக்கவருவேன் என அவர் தெரிவித்து இருக்கிறார். இது தொடர்பாக அமீர்கான் பேட்டி அளித்ததாவது ”திரையுலகில் சில ஆண்டுகளாக ஓய்வு இன்றி நடித்தேன். அதனால் தற்போது ஓய்வெடுக்க முடிவுசெய்து உள்ளேன். என் குடும்பத்தினருடன் நேரத்தை செலவிட விரும்புகிறேன். இதற்கிடையில் நான் செய்யவேண்டிய சில சொந்த வேலைகள் இருக்கிறது. ஒரு ஆண்டுக்கு பின் மீண்டும் நடிப்பேன்” என்று அவர் தெரிவித்துள்ளார்.