Categories
மாநில செய்திகள்

1 To 8-ம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு…. சற்றுமுன் முதல்வர் ஸ்டாலின்….!!!

தமிழகத்தில் பொரோனோ அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஒன்றரை வருடமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் திறக்கப்படாமல் இருந்தது.அதன்பிறகு கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வந்த நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் 1ம் தேதி முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடந்து கொண்டிருக்கிறது. இதனையடுத்து வருகின்ற நவம்பர் 1 முதல் அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் நேரடி வகுப்புகள் தொடங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

இந்நிலையில் நவம்பர் 1 முதல் தொடக்கப் பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் பள்ளிகளை நோக்கித் துள்ளி வரும் குழந்தைகள் அனைவரையும் வருக வருக என நான் வரவேற்கிறேன் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். பள்ளிக்கு வரும் குழந்தைகளை நேசமுடன் வரவேற்போம். விருந்தினர்களை வாசலுக்கு வந்து வரவேற்பதை போல வரவேற்பு கொடுங்கள். நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும். இனி நடப்பவை நல்லவையாக இருக்கட்டும் என்று முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

Categories

Tech |