கோவை குற்றாலத்தில் நீர் வரத்து குறைந்துள்ளதால் இன்று முதல் சுற்றுலா பயணிகள் செல்ல வனத்துறை அனுமதி அளித்துள்ளது.கோவை மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள கோவை குற்றாலம் நீர்வீழ்ச்சிக்கு செல்ல, சுற்றுலா பயணிகளுக்கு கடந்த மே மாதம் வனத்துறையினர் தடை விதித்தனர்.தொடர் மழையின் காரணமாக, நீர்வீழ்ச்சியில் நீர்வரத்து அதிகரித்ததால், மறு அறிவிப்பு வரும் வரை சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி நிறுத்தி வைக்கப்படுவதாக வனத்துறை அறிவித்தது.
இந்நிலையில், கடந்த சில நாட்களாக நீர்வீழ்ச்சிக்கு நீர் வரத்து குறைந்தது. இதையடுத்து இன்று முதல், கோவை குற்றாலத்துக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்படுகிறது. கோவை குற்றாலத்துக்கு செல்ல விரும்புவோர், ஆன்லைனில் முன்பதிவு செய்ய வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.அதன்படி coimbatorwilderness.com என்ற இணையதளத்தில் கட்டணம் செலுத்தி முன்பதிவு செய்து கொள்ளலாம். மேலும் கூடுதல் விவரங்களுக்கு 7826070883 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.