இந்தியா-சீனா இடையே நேற்று 15 மணி நேரம் பேச்சுவார்த்தை நடைபெற்றது.
இந்தியா-சீனா நாடுகளுக்கிடையேயான கிழக்கு லடாக் விவகாரத்தின் ஒன்பதாவது சுற்று கார்ட்ஸ் கமாண்டர் அளவிலான பேச்சுவார்த்தை நேற்று நடைபெற்றது. காலை 11 மணியளவில் தொடங்கிய பேச்சுவார்த்தை, இன்று அதிகாலை 2.30 மணிக்கு முடிவடைந்தது. இந்த பேச்சுவார்த்தை சுமார் 15 மணி நேரம் நடைபெற்றது.
இதில், எல்லையில் படைகளை திரும்பப் பெறுவது பற்றியும்,பதற்றத்தை ஏற்படுத்தும் நடவடிக்கைகளை தவிர்ப்பது குறித்தும்,எல்லையில் அமைதியை நிலைநாட்டுதல் போன்றவை குறித்தும் ஆலோசிக்கப்பட்டு உள்ளது. கடந்த ஆண்டு மே மாதம் சீனா எல்லையில் அத்துமீறியதால் அங்கு இரு நாட்டு எல்லைகளிலும் பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.