சீனாவிலுள்ள சியான் நகரில் ஒரு மாதத்திற்கு விதிக்கப்பட்டிருந்த ஊரடங்கு ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீனாவின் பெய்ஜிங் நகரில் ஒலிம்பிக் போட்டி நடைபெறவிருக்கிறது. இந்நிலையில் அங்கு கொரோனா பாதிப்பு குறையத் தொடங்கியிருக்கிறது. எனவே ஒரு மாதத்திற்கு அறிவிக்கப்பட்டிருந்த ஊரடங்கு ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பெய்ஜிங் மாகாணத்தில் இருக்கும் இரண்டு மில்லியன் மக்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டிருக்கிறது.
பணியாளர்கள், வீரர்கள், அதிகாரிகள் மற்றும் நிரூபர்கள் தனிமைப்படுத்தப்பட்டிருக்கின்றனர். கடும் விதிமுறைகளுக்கு மத்தியில் ஒலிம்பிக் போட்டி நடைபெற இருக்கிறது. மேலும் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க இருக்கும் விளையாட்டு வீரர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். சியான் நகரில் அடுத்த மாதம் ஒலிம்பிக் போட்டி நடக்கவிருப்பதால் தொடர்ந்து கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கிறது.