Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

1 கிலோ 60 ரூபாய்…. அதிகரித்த பட்டாணி விளைச்சல்….. கொடைக்கானல் விவசாயிகள் மகிழ்ச்சி….!!

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் பட்டாணி விளைச்சல் அதிகரித்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டம்  கொடைக்கானல் அருகே உள்ள வில்பட்டி பள்ளங்கி கோம்பை பகுதிகளில் பல ஏக்கர் பரப்பளவில் பட்டாணி பயிரிடப்பட்டுள்ளது. அங்கு நிலவும் பனிப்பொழிவு மற்றும் இதமான காலநிலை காரணமாக பட்டாணி நல்ல விளைச்சல் கண்டுள்ளது. கடந்த ஆண்டு ஒரு கிலோ 40 ரூபாய் வரை விற்கப்பட்ட நிலையில் தற்போது 55 முதல் 60 ரூபாய் வரை கிடைத்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Categories

Tech |