பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய வாலிபரை காவல்துறையினர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள சூரக்கோட்டை வடக்கு தெருவில் சூரியபிரகாஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் மீது பல்வேறு வழக்குகள் இருக்கிறது. இவரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என போலீஸ் சூப்பிரண்டு ரவுளிபிரியா பரிந்துரையின்படி போலீஸ் இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் வழக்கு ஆவணங்களை கலெக்டரிடம் தாக்கல் செய்தார். இந்த ஆவணங்களை பரிசீலனை செய்த கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், சூரியபிரகாசை குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவு பிறப்பித்தார். இதனையடுத்து சூரியபிரகாசை காவல்துறையினர் கைது செய்து திருச்சி மத்திய சிறைச்சாலையில் அடைத்தனர்.