முக கவசம் அணியாமல் வெளியில் சுற்றுபவர்களுக்கு ஒரு கோடி ரூபாய் அபராதம் என அரசு அறிவித்துள்ளது
உலகம் முழுவதையும் அச்சுறுத்தி வரும் கொரோனா தொற்று பரவலைத் தடுக்க பல கட்டுப்பாடுகளை உலக நாடுகள் எடுத்து வருகின்றன. ஒரு சில நாடுகளில் தொற்றின் தாக்கம் குறைந்தாலும் பல நாடுகளில் தொற்றினால் ஏற்படும் தீவிரமடைந்து வருகின்றது. அவ்வகையில் வளைகுடா நாடான கத்தாரில் 24 மணி நேரத்தில் புதிதாக 1500-க்கும் மேற்பட்டோர் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 28 ஆயிரத்தை கடந்துள்ளது.
இந்நிலையில் கட்டார் உள்துறை அமைச்சர் தனது ட்விட்டர் பக்கத்தில் ஞாயிறு முதல் வெளியில் செல்பவர்கள் அனைவரும் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப் படுகின்றது. உத்தரவை மீறுபவர்களுக்கு 1,03,18571 ரூபாய் அல்லது 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும். தனியாக வாகனம் ஓட்டி வரும் நபர்களுக்கு மட்டும் இதிலிருந்து விலக்கு அளிக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.