Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

தூக்க கலக்கத்தில் வந்த 1 1/2 வயது குழந்தை…. கொதிக்கும் சாம்பாரில் விழுந்து பலி…. கதறும் குடும்பத்தினர்….!!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள சாமனூர் ஜீவா நகரில் அருணகிரி- சுகுணா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 2 மகள்கள் இருக்கின்றனர். இதில் 2-வது மகள் 1 1/2 வயதுடைய தேன்மொழி. இந்நிலையில் சுகுணா அடுப்பில் இருந்து சாம்பார் பாத்திரத்தை இறக்கி வைத்துவிட்டு மாட்டிற்கு தண்ணீர் வைப்பதற்காக சென்றுள்ளார். அந்த சமயம் தூக்க கலக்கத்தில் கண்விழித்து வந்த தேன்மொழி நிலைதடுமாறி கொதிக்கும் சாம்பாருக்குள் தவறி விழுந்து அலறி சத்தம் போட்டுள்ளார்.

அவரது சத்தம் கேட்டு ஓடிவந்த சுகுணா தனது குழந்தையை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |