Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் ஒரு வருடத்தில் 1.64 லட்சம் தற்கொலை‌கள்…. “குறிப்பாக இவர்கள்தான் அதிகம்”….. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!!!

இந்தியாவில் கடந்த 2021-ம் ஆண்டு நடந்த தற்கொலை மரணங்கள் குறித்த தவகவலை மத்திய குற்ற ஆவண காப்பகம் வெளியிட்டுள்ளது. அதன்படி கடந்த வருடம் இந்தியாவில் 1,64,033 பேர் தற்கொலை செய்துகொண்டு உயிரிழந்துள்ளனர். இதில் தமிழகத்தில் மட்டும் 18,925 பேர் தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்துள்ளனர்.

இவர்களின் தற்கொலைக்கு வேலையின்மை மற்றும் பணியிலிருந்து நீக்கப்பட்டவை போன்ற பல்வேறு விதமான காரணங்கள் கூறப்படுகிறது. இந்த தற்கொலைக்கு வேலையின்மை மிகப்பெரிய காரணமாக கூறப்படும் நிலையில், சிறு தொழில் முனைவோர்கள், சுய தொழில் செய்பவர்கள் மற்றும் தினக்கூலி வேலை செய்பவர்கள் அதிக அளவில் தற்கொலை செய்து கொண்டு இறந்துள்ளனர்.

இதற்கு அடுத்தபடியாக மாணவர்கள் தான் அதிக அளவில் தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்துள்ளனர். இதேபோன்று விவசாயிகள் மற்றும் விவசாய ரீதியான தொழில் செய்பவர்களின் தற்கொலையும் அதிகரித்துள்ளது. மேலும் கடந்த வருடம் சாலை விபத்துகளில் மட்டும் இந்தியாவில் மொத்தம் 3,97,000 பேர் உயிரிழந்துள்ளனர். சர்வதேச அளவில் சாலை விபத்துகள் நடக்கும் நாடுகளில் இந்தியா  முதலிடத்தில் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Categories

Tech |