மே மாதம் 6ம் தேதியில் இருந்து ஜூன் 2ம் தேதி வரை வெளிமாநிலங்களில் இருந்து 1.26 லட்சம் பேர் தமிழகம் வந்துள்ளனர்.
சொந்த வாகனங்கள், ரயில், அரசு பேருந்துகள், விமானங்கள் மூலம் தமிழகம் வந்தவர்களின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. அதில், அரசு பேருந்துகள் மூலம் 35,034 பேர், சொந்த வாகனங்கள் மூலம் 76,589 பேர், ரயில் மூலம் 6,930 பேர், விமானங்கள் மூலம் 7,532 பேர் தமிழகத்திற்கு வருகை தந்துள்ளனர்.
மேலும், கர்நாடக மாநிலத்தில் இருந்து 31,881 பேர், கேரளாவில் இருந்து 14,857 பேர், ஆந்திராவில் இருந்து 5,702 பேர் தமிழகம் வந்துள்ளனர். நாடு முழுவதும் 5ம் கட்ட ஊரடங்கு நடைமுறையில் உள்ள நிலையில், மத்திய அரசின் அறிவுரைப்படி பல்வேறு மாநிலங்களில் சிக்கியுள்ள புலம்பெயர் தொழிலாளர்களை அந்தந்த மாநிலங்களுக்கு அழைத்து வரும் ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.
அதன்படி மத்திய அரசு சார்பில் சிறப்பு ரயில்கள் அனைத்து மாநிலங்களிலும் இயக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் பல்வேறு மாநிலங்களில் இருந்து பேருந்துகள் மற்றும் சிறப்பு ரயில்கள் மூலம் தினமும் பல்லாயிரம் மக்கள் தமிழகம் திரும்பி வருகின்றனர். இந்த நிலையில் தமிழகத்திற்கு இதுவரை வருகை தந்துள்ள நபர்களின் எண்ணிக்கை விவரங்களை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதேபோல, வெளிநாடுகளில் சிக்கித்தவிக்கும் இந்தியர்களை மீட்கும் பணிகளும் மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது.