Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

1.22 லட்ச ரூபாய் மதிப்பு…. அதிர்ச்சியடைந்த ஷோரூம் மேலாளர்…. போலீசாரின் அதிரடி நடவடிக்கை…!!

ஷோரூமிலிருந்து மோட்டார் சைக்கிள் திருடிய வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள எட்டயபுரம் ரோட்டில் இருக்கும் தனியார் மோட்டார் சைக்கிள் ஷோரூமில் ராமமூர்த்தி என்பவர் மேலாளராக வேலை பார்த்து வருகிறார். இந்த ஷோரூமில் இருந்த 1.22 லட்சம் ரூபாய் மதிப்புள்ள மோட்டார் சைக்கிள் காணாமல் போனதை அறிந்து அதிர்ச்சியடைந்த ராமமூர்த்தி கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மோட்டார் சைக்கிள் திருடிய நபரை தீவிரமாக தேடி வந்துள்ளனர். இந்நிலையில் கடலையூர் சாலையில் தனிப்படை காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

அப்போது அவ்வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த ஒரு வாலிபரை காவல்துறையினர் பிடித்து விசாரித்த போது அவர் இலுப்பையூரணி பகுதியில் வசிக்கும் மாரிமுத்து என்பது தெரியவந்துள்ளது. மேலும் மாரிமுத்து கோவில்பட்டி ஷோரூமில் இருந்த மோட்டார் சைக்கிளை திருடியதாக காவல்துறையினரிடம் ஒப்புக்கொண்டுள்ளார். அதன்பின் காவல்துறையினர் மாரி முத்துவை கைது செய்ததோடு, அவரிடம் இருந்த மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |