Categories
மாநில செய்திகள்

1-12 வகுப்பு வரையிலான பள்ளிகளை திறங்க?…. தமிழகத்தில் புதிய அதிரடி….!!!!

தமிழகத்தில் கொரோனா காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்திற்கும் ஜனவரி 31ஆம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நேரடி வகுப்புகள் அனைத்தும் ரத்து செய்து அரசு உத்தரவிட்டுள்ளது. மாணவர்களுக்கு நடைபெற இருந்த தேர்வுகள் அனைத்தும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. அதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் ஜனவரி 31ஆம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில் மீண்டும் பள்ளிகள் திறப்பது குறித்து மருத்துவ நிபுணர்கள் மற்றும் அதிகாரிகளுடன் முதல்வர் ஸ்டாலின் இன்னும் இரண்டு நாட்களில் ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.இதையடுத்து பள்ளிக்கூடம் தவிர எல்லாம் திறந்திருக்கிறது. எனவே இனியும் பள்ளிக்கூடங்களை மூடி வைப்பது நாட்டின் கல்வி மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு ஏற்றது அல்ல. உரிய கட்டுப்பாடுகளுடன் 1 முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான பள்ளிகளை திறக்க தமிழக அரசு அனுமதிக்க வேண்டும் என்று தனியார் பள்ளி கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. இந்த கோரிக்கை தொடர்பாக வருகின்ற 27 ஆம் தேதி அதிகாரிகள் ஆலோசிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Categories

Tech |