பாகிஸ்தானிடம் தோற்றபிறகு ஆப்கான் வீரர்கள் மைதானத்தில் கண்ணீர் விட்டு அழும் போட்டோஸ் வைரலாகி நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஐக்கிய அரபு அமீரகத்தில் 15ஆவது ஆசிய கோப்பை தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடர் இறுதி கட்டத்தை எட்டி இருக்கும் நிலையில், சூப்பர் 4 சுற்றுக்குள் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் நுழைந்தது.. இந்த நிலையில் ஒவ்வொரு அணியும் தலா ஒரு முறை மற்ற அணிகளுடன் மோத வேண்டும். இதில் டாப் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டியில் விளையாடும்..
இலங்கை அணி 2 போட்டியில் வெற்றி பெற்று முதலிடம் பிடித்து இறுதிப்போட்டிக்கு முன்னேறி விட்டது. பாகிஸ்தான் அணி 1 போட்டியில் வெற்றி பெற்று இரண்டாவது இடத்தில் இருக்கும் நிலையில், இந்தியா இரண்டு போட்டியிலும் தோல்வியுற்று மூன்றாம் இடத்திலும், ஆப்கானிஸ்தான் அணி ஒரு தோல்வியுடன் கடைசி இடத்திலும் இருக்கிறது..
இந்நிலையில் நேற்று இரவு சூப்பர் 4 சுற்றில் பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் ஷார்ஜா மைதானத்தில் மோதியது.. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 129/6 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக இப்ராஹிம் சத்ரான் மட்டும் 35 ரன்கள் எடுத்தார். மேலும் ஹஜ்ரத்துல்லாஹ் ஜஸாய் 21 ரன்களும், ரசித் தான் ஒரு 18* ரன்களும் எடுத்தனர். பாகிஸ்தான் அணியில் ஹரிஸ் ரவூப் அதிகபட்சமாக 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்..
இதையடுத்து 130 ரன்கள் இலக்கை நோக்கி பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர்களாக முகமது ரிஸ்வானும், பாபர் அசாமும் களமிறங்கினர்.. ஃபசல்ஹக் பாரூக்கி வீசிய முதல் ஓவரிலேயே பாபர் அசாம் டக் அவுட் ஆகி வெளியேறி . அதிர்ச்சியளித்தார். அதனை தொடர்ந்து 4ஆவது ஓவரில் பக்கர் ஜமானும் 5 ரன்னில் ரன் அவுட் ஆகி நடையை கட்டினார். அதனைத் தொடர்ந்து 20 ரன்கள் அடித்திருந்த முகமது ரிஸ்வான் 9ஆவது ஓவரில் ரசித் கான் சுழலில் எல்பிடபிள்யு ஆகி ஆட்டம் இழந்தார். அப்போது பாகிஸ்தான் ஸ்கோர் 8.4 ஓவரில் 45/3 ஆக இருந்தது.. பின் இப்திகார் அகமது மற்றும் சதாப்கான் இருவரும் பொறுப்புடன் ஆடி சிறிய பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.
இந்நிலையில் 16 வது ஓவரில் இப்திகார் அகமது 30(33) ரன்களில் ஆட்டம் இழந்து வெளியேறினார். அதனைத் தொடர்ந்து ரஷீத் கான் வீசிய 17ஆவது ஓவரின் முதல் பந்தில் சிக்ஸர் அடித்த ஷதாப் கான் 33 (26) அடுத்த பந்தில் ஆட்டமிழந்தார். பாகிஸ்தான் வெற்றிக்கு 3 ஓவரில் 25 ரன்கள் தேவைப்பட்டது. பின் ஃபசல்ஹக் பாரூக்கி வீசிய 18ஆவது ஓவரின் முதல் பந்தில் முகமது நவாஸ் 4, கடைசி பந்தில் குஷ்த்தில் ஷா 1 என அடுத்தடுத்து ஆட்டமிழக்க பாகிஸ்தான் 109/7 என்று இருந்ததால் ஆட்டம் பரபரப்பானது.. 2 ஓவருக்கு 21 ரன்கள் தேவை..
அதன்பின் ஃபரீத் அகமது வீசிய 2ஆவது பந்தில் ஹரிஸ் ரவூப் 0 ரன்னில் நடையை கட்ட, அதே ஓவரில் 4ஆவது பந்தில் ஆசிப் அலி 16(8) ஒரு சிக்ஸர் அடித்தார். பின் அடுத்த பந்தில் ஆசிப் அலி சிக்ஸர் அடிக்க முயல அது கரீம் ஜனத்திடம் சென்று கேட்ச் ஆனது.. இதையடுத்து கைவசம் ஒரு விக்கெட் இருக்க, கடைசி ஓவரில் வெற்றிக்கு 11 ரன்கள் தேவைப்பட்டது. பரபரப்பான நேரத்தில் பாரூக்கி வீசிய கடைசி ஓவரில் முதல் 2 பந்தையும் புல்டாஸாக வீச இளம்வீரர் நசீம் ஷா தொடர்ச்சியாக 2 சிக்ஸராய் அடித்து வெற்றிபெற வைத்து அரங்கை அதிரச்செய்தார்..
இதனால் ஆப்கானிஸ்தான் மட்டுமின்றி இந்தியா பரிதாபமாக வெளியேறியது. நசீம் ஷா 14(4) ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்த நிலையில், பாகிஸ்தான் அணி 19.2 ஓவரில் 9 விக்கெட் இழந்து 131 ரன்கள் எடுத்து வென்று இறுதிப்போட்டிக்குள் நுழைந்து விட்டது.
இந்தப் போட்டியில் ஆப்கானிஸ்தான் பந்துவீச்சாளர்கள் முதலில் இருந்து கடைசி வரை சிறப்பாக பந்துவீசி வந்தனர். கண்டிப்பாக ஆப்கானிஸ்தான் வென்றே தீரும் என்றுதான் ஆப்கானிஸ்தான் ரசிகர்கள் முதல் இந்திய ரசிகர்கள் வரை நினைத்திருந்தனர்.. ஆனால் கடைசி கட்டத்தில் த்ரில்லாக வெற்றி பெற்றதன் மூலம பாகிஸ்தான் அரையிறுதிக்குள் நுழைந்துவிட்டது. இதனால் ஆப்கானிஸ்தான் அணியால் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை. இதனால் குர்பாஸ், இப்ராகிம் சத்ரான், ஃபசல்ஹக் பாரூக்கி உள்ளிட்டோர் மைதானத்தில் கண்ணீர் விட்டு அழுதனர்.. இது காண்போரை நெகிழச் செய்து விட்டது. இந்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.
Well played guys your our heroes Afghanistan 🇦🇫.#AFGvsPAK #PAKvAFG #Pakistan #Afghanistan #IndianCricketTeam pic.twitter.com/uivYe3ah06
— A H (@arayankhani) September 7, 2022
https://twitter.com/ashrohitian2/status/1567577685387509761