Categories
மாநில செய்திகள்

1 முதல் 9 ஆம் வகுப்பு வரை…. பள்ளிக்கல்வித்துறை உத்தரவு…!!!

நாடு முழுவதும் மீண்டும் கொரோனா பரவல் வேகம் எடுத்து வருகிறது. இதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் கற்றல் இடைவெளியை சரி செய்ய இரண்டு முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இணைப்புப் பயிற்சி கட்டகமும், ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்புகளுக்கு பயிற்சி புத்தகமும் உருவாக்கப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

இதன்படி முதற்கட்டமாக இணைப்பு பாட பயிற்சி கட்டகம் ஏப்ரல் 22 முதல் மே 10 வரை கல்வி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ளது. ஒரு வகுப்பிற்கு தினசரி இரண்டு காணொளிகள் வீதம் இரண்டு முதல் ஒன்பது வகுப்புகளுக்கு ஒளிபரப்பு செய்யப்படும் என்று தெரிவித்துள்ளது.

Categories

Tech |