அறைக்குள் சிக்கிய குழந்தையை தீயணைப்பு வீரர்கள் மீட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மாவட்டத்தில் உள்ள தேனாம்பேட்டை பகுதியில் தம்பி துரை என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 2 1/2 வயதில் முத்துச்செழியன் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் முத்துச்செழியன் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தான். அதன் பின் சிறுவன் படுக்கை அறைக்கு சென்று உள்புறமாக கதவை பூட்டி துங்கியுள்ளார். சிறிது நேரம் கழித்து குழந்தை காணாமல் போனதை அறிந்த பெற்றோர் கதவை தட்டியுள்ளனர்.
இவர்களின் சத்தம் கேட்டு தூக்கத்திலிருந்து எழுந்த முத்துச் செழியன் கதவை திறக்க முயன்றுள்ளான் ஆனால் சிறுவனால் கதவை திறக்க முடியாததால் படுக்கை அறையிலேயே கதறி அழுதுள்ளான். இதுக்குறித்து தம்பிதுரை உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் நவீன டோர் ஓப்பனர் இயந்திரம் மூலம் கதவை உடைக்காமல் சுமார் ஒரு மணி நேரத்திற்கு பிறகு அறைக்குள் இருந்த குழந்தையை பத்திரமாக மீட்டனர்.