Categories
மாநில செய்திகள்

1 மணி நேரத்திற்கும் மேல் லிஃப்டில் சிக்கித்தவித்த 7 பேர்…. காவலர்களின் துரிதச் செயல்…. குவியும் வாழ்த்துக்கள்….!!!!!

சென்னை தியாகராய நகரின் ஜி.என். செட்டி சாலையிலுள்ள வணிக வளாகத்தின் 2வது தளத்தில் பிரபல உணவகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த உணவகத்துக்கு மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஒரு குடும்பம் நேற்று மதியம் சென்றுள்ளது. இந்நிலையில் அவர்கள் கட்டிடத்தில் இருந்த லிஃப்டை பயன்படுத்திய போது, அது திடீரென்று பழுதானது. அவற்றில் ஒரு சிறுவன், 3 பெண்கள் உட்பட மொத்தம் 7 பேர் சிக்கினர். இவ்வாறு லிஃப்ட் பழதானதால் அச்சமடைந்தத அவர்கள் தங்களை காப்பற்றும்படி கூச்சல் போட்டுள்ளனர்.

ஏறத்தாழ 1 மணிநேரமாக லிஃப்டில் அவர்கள் சிக்கியிருந்தனர். இந்த நிலையில் அந்த வளாகத்திலிருந்த காவல் நுண்ணறிவு பிரிவைச் சேர்ந்த காவலர் குகன் என்பவர் காவல் கட்டப்பாட்டு அறையை தொடர்பு கொண்டு சம்பவம் பற்றி தகவல் தெரிவித்துள்ளார். பின் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காவலர் குகன் உட்பட 3 பேரும் சேர்ந்து அந்த லிஃப்ட்கதவை கடப்பாரை மூலம் உடைத்தனர்.

அதன்பின் ஒருவழியாக போராடி கதவை உடைத்து உள்ளே சிக்கியிருந்த 7 பேரையும் மீட்டனர். சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக லிஃப்டில் சிக்கித் தவித்த 7 பேருக்கும் முதலுதவி சிகிச்சையளிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து அனைவரும் நலமுடன் உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. உரிய நேரத்தில் சிறப்பாக செயல்பட்ட காவலர்களை அப்பகுதியைச் சேர்ந்த பல பேரும் பாராட்டினர். பின் காவல்துறை உயர் அதிகாரிகள் உட்பட காவலர்கள் பலரும் அவர்களின் செயலுக்கு தங்களின் பாராட்டுக்களை தெரிவித்தனர்.

Categories

Tech |