இந்த சம்பவம் தொடர்பாக கொரட்டூர் காவல்துறையில் சரவணன் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தனிப்படை அமைத்து ஆதர்ஷ் சுப்பிரமணியனை தேடி வந்தனர். இதனிடையே கடத்தல் கும்பல் தொழிலதிபர் சரவணனின் செல்போனிற்கு தொடர்பு கொண்டு 1 கோடி ருபாய் கேட்டு மிரட்டியதாக தெரிய வந்தது. போலீசாரின் விசாரணையில் அந்த கார் தனியார் டிராவல்ஸ் நிறுவனத்தில் இருந்து வாடகைக்கு எடுத்து செல்லபட்டது என்பதால் அதில் ஜி.பி.எஸ். கருவி பொருத்தப்பட்டு இருந்ததால் கார் ஆந்திர மாநிலம் காளஹஸ்தி பகுதியில் சென்று கொண்டிருப்பதை கண்டுபிடித்தனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் காலை தனிப்படை போலீசார் ஆதர்ஷ் சுப்பிரமணியனை கடத்திச் சென்ற கும்பலான செந்தில்குமார், சிலம்பரசன், ஜீவன் பிரபு ஆகியோரையும் காரையும் மடக்கி பிடித்தனர். மேலும் விசாரணையில் தொழில்ரீதியாக பணம், கொடுக்கல் வாங்கல் பிரச்சினையில் செந்தில்குமார் ஆதர்ஷ் சுப்பிரமணியனை கடத்தி சென்றதும், செந்தில்குமார் அவருக்கு உறவினர் என்பதும், தெரியவந்தது. அதைத்தொடர்ந்து போலீசார் 3 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.