இந்தியாவில் கடந்த ஆண்டில் மட்டும் ஒரு கோடியே 30 லட்சம் முறை அதிபயங்கர மின்னல் வெட்டும் ஏற்பட்டதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
ஹைபர் லோகல் வானிலை அமைப்புடன் இயங்கும் நெட்வொர்க் அமைப்பானது ஜூலை 19ஆம் தேதி பெங்களூரில் ஒரு தகவல் அறிக்கையை வெளியிட்டது. அதில் இந்தியாவில் கடந்த ஆண்டில் மட்டும் ஒரு கோடியே 30 லட்சம் வரை அதிபயங்கர மின்னல் வெட்டு நடைபெற்றுள்ளதாக அந்த அறிக்கையில் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இது 2019ஆம் ஆண்டு ஒப்பிடும்போது 23 சதவீதம் அதிகமாக உள்ளதாக கூறப்படுகின்றது. மேலும் மின்னல் வெட்டு அதிகம் ஏற்படும் மாநிலங்களில் முதலிடத்தில் தமிழகம், இரண்டாவது இடத்தில் ஆந்திரா, மூன்றாவது இடத்தில் கர்நாடகா, நான்காவது இடத்தில் ஒடிசா உள்ளிட்ட 10 மாநிலங்கள் அடுத்தடுத்த வரிசையில் உள்ளன.
இந்தியாவிலேயே அதிக பட்சமாக கடந்த ஆண்டில் 1,323 முறை அதிபயங்கர மின்னல் வெட்டு தாக்குதல் நடைபெற்றுள்ளதாகவும், இவை அனைத்தும் தமிழகத்தில் மட்டும் நடைபெற்று உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பீகார், உத்தரபிரதேசம், மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் இதை விட குறைந்த அளவு மின்னல் வெட்டு ஏற்பட்டிருந்தாலும், அதன்மூலம் மூலம் அதிக உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். 2020ஆம் ஆண்டு கணக்கீட்டின்படி மே, ஜூன், செப்டம்பர் ஆகிய மாதங்களில் அதிக மின்னல் வெட்டு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது 26.6 சதவீதம் அதிகரித்துள்ளது என்று அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.