Categories
தேசிய செய்திகள்

1 இல்ல 2 தடுப்பு மருந்துகள்…! உலக அரங்கில் சாதித்த இந்தியா…. கொரோனாவுக்கு முடிவுரை …!!

உலகையே உலுக்கி வரும் கொரோனாவுக்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்க முடியாமல் உலக நாடுகள் திணறி வருகின்றன. அண்மையில் ரஷ்யா இதற்கான தடுப்பூசி கண்டுபிடித்து விட்டதாகவும், இது வெற்றி அடைந்து விட்டதாகவும் தெரிவித்தது. இது உலக அரங்கில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த மூன்று மாதங்களாக உலக நாடுகள் முழுவதிலும் உள்ள ஆய்வாளர்கள் இதற்கான தடுப்பு கண்டு பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

அந்த வரிசையில் இந்தியாவும் தன்னை உட்படுத்திக் கொண்டது. அதன் பலனாக தற்போது இந்தியாவில் இதற்கான மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் ஆய்வில் உள்ள 2  கொரோனா தடுப்பு மருந்துகள் விலங்குகளுக்கு வெற்றிகரமாக சோதனை செய்யப் பட்டுள்ளதாக இ.சி.எம்.ஆர் தெரிவித்துள்ளது.

மேலும் இதன் அறிக்கையும் அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இம் மருந்துகளை அரசின் அனுமதியுடன் மனிதர்களிடத்தில் சோதனை செய்வதற்கான பணிகள் தொடங்கி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இது நாடு முழுவதும் உள்ள மக்களுக்கு மகிழ்ச்சி கொடுக்கும் செய்தியாக பார்க்கப்படுகிறது.

Categories

Tech |