பஞ்சாப் காவல் துறை நடத்திய அதிரடி நடவடிக்கையில் சென்ற 10 தினங்களில் மட்டும் 5 பயங்கரவாதக் குழுக்கள் கண்டுபிடிக்கப்பட்டு, 17 பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டு இருக்கின்றனர். அத்துடன் அவர்களிடம் இருந்து 4 ஏகே ரக துப்பாக்கி, கைத்துப்பாக்கிகள் என 25 துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் அவர்களது இருப்பிடங்களில் இருந்து வெடிப்பொருள்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மாநிலத்தில் அமைதியை உருவாக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் பஞ்சாப் காவல் துறை எடுத்து வருவதாக ஐஜிபி சுக்செயின் சிங் கில் தெரிவித்து இருக்கிறார்.
பல நாடுகளில் இருந்து செயல்படும் பயங்கரவாதக் குழுக்களுடன் இணைந்து இந்தியாவில் சதிச் செயல்களை செய்ய திட்டமிட்டு வந்த 5 குழுக்கள் கண்டுபிடிக்கப்பட்டு, 17 பேர் கைது செய்யப்பட்டு இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். முன்பாக கனடாவில் இருந்து செயல்படும் பயங்கரவாதக் குழுவைச் சேர்ந்த நபரை செப்டம்பர் 28ம் தேதி பிகாரில் கைது செய்ததகாவும், அவர் பல்வேறு கொலை, கொலை முயற்சி, தாக்குதல், கொள்ளை உள்ளிட்ட சம்பவங்களில் ஈடுபட்டதும் கண்டுபிடிக்கப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார். அவரிடம் நடத்திய விசாரணையை அடுத்து, பஞ்சாப் மாநிலத்திலும் பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கையாக அதிரடி சோதனைகள் நடத்தப்பட்டு 5 குழுக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.