விஜய் டிவி பிரபலம் புகழின் மூன்றாவது திருமண புகைப்படம் வெளியாகியுள்ளது.
தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் கலக்கப்போவது யாரு, குக்கு வித் கோமாளி உள்ளிட்ட நிகழ்ச்சிகள் மூலம் பிரபலமான நடிகர் புகழ், இவர் தற்பொழுது படங்களில் நடித்து வருகின்றார். இவர் தமிழ் சினிமா உலகில் சிக்ஸர் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இதை அடுத்து என்ன சொல்ல போகிறாய், வலிமை, எதற்கும் துணிந்தவன், வீட்ல விசேஷம், யானை உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.
மேலும் தற்பொழுது பல திரைப்படங்களில் நடித்து வருகின்றார். இந்த நிலையில் இவர் ஆகஸ்ட் 1-ம் தேதி தனது காதலியை பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார். அவர்களின் திருமணத்திற்கு பலரும் வாழ்த்துக்களை கூறினார்கள். இந்நிலையில் அண்மையில் புகழுக்கு நடைபெற்ற திருமணம் இரண்டாவது திருமணமாம்.
ஒரு வருடத்திற்கு முன்பே புகழும் பென்சியாவும் பதிவு திருமணம் செய்து கொண்ட புகைப்படம் வெளியாகி இருக்கின்றது. கோவையில் இருக்கும் பெரியார் படிப்பகத்தில் இருவரும் சென்ற வருடம் பதிவு திருமணம் செய்துள்ளார்கள். இவர்களின் திருமணத்திற்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் சென்ற வருடமே இருவரும் பதிவு திருமணம் செய்துள்ளார்கள். தற்பொழுது பெற்றோர்கள் சம்மதித்ததால் முறைப்படி அனைவரையும் அழைத்து திருமணம் செய்து கொண்டார்கள்.
இந்த நிலையில் பென்சியாவின் குடும்பத்தாரின் ஆசையை நிறைவேற்றுவதற்காக மூன்றாவது முறையாக திருமணம் செய்து கொண்டுள்ளார் புகழ். இஸ்லாமிய முறைப்படி நடைபெற்ற திருமணத்தின்போது எடுக்கப்பட்ட போட்டோவை பகிர்ந்து இன்ஸ்டாவில் புகழ் கூறியுள்ளதாவது, என் தந்தை அன்பிற்கு ஒரு முறை….. என் தாய் அன்பிற்கு ஒரு முறை….. என் மனைவி குடும்பத்தார் அன்பிற்கு ஒரு முறை…. வேற அன்பு உள்ளங்கள் ஆசைப்பட்டால் மேலும் ஒரு முறை தயார். இந்தியனாக இருக்கிறேன். எல்லா புகழும் இறைவனுக்கே… என பதிவிட்டுள்ளார்.
https://www.instagram.com/p/CiDLHc_BFQq/?utm_source=ig_embed&ig_rid=77cb07e5-b94c-4cb2-867c-f1fb2d174f64