சிறுமிக்கு வேலை வாங்கி தருவதாக கூறி பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள பால்கர் என்ற பகுதியில் 17 வயது சிறுமியிடம் வேலை வாங்கி தருவதாக கூறி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து சிறுமி மாவட்ட ஊரக போலீசில் புகார் ஒன்றை அளித்துள்ளார்.
இந்த புகாரின் அடிப்படையில் பால்கர் போலீசார் 3 பேரை கைது செய்துள்ளனர். மேலும் தலைமறைவாகியுள்ள இருவரை வலைவீசி தேடி வருகின்றனர். இந்நிலையில் இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 376 மற்றும் போக்சோ சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.