Categories
பல்சுவை

1 இல்ல 2 இல்ல 18 வருடங்களுக்கு பிறகு…. ஃபேஸ்புக் நிறுவனம் சந்தித்த சோகம்…. என்னன்னு கொஞ்சம் நீங்களே பாருங்க…..!!!!

உலகில் சமூக வலைதளத்தில் ஒன்றான பேஸ்புக்கின் தினசரி பயனர்களின் எண்ணிக்கையானது 18 வருடங்களில் இல்லாத அளவு குறைந்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ள்ளது.
இது தொடர்பாக பேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டா கூறியதாவது, பேஸ்புக்கின் தினசரி பயனர்களின் எண்ணிக்கையானது கடந்த 3 மாதங்களில் 193 கோடியில் இருந்து 192.9 கோடியாக குறைந்து இருக்கிறது. இதற்கு டிக்டாக், யூடியூப் ஆகிய சமூக வலைதளங்களுடனான போட்டியே காரணம் ஆகும். அதுமட்டுமல்லாமல் விளம்பரதாரர்களும் பேஸ்புக்கில் விளம்பரம் செய்வதற்காக செலவிடும் தொகையை குறைத்து இருக்கின்றனர்.
நியூயார்க் பங்குச் சந்தையில் மெட்டா நிறுவனத்தின் பங்குகள் 20 % வீழ்ச்சியை சந்தித்துள்ளது. இதனிடையில் மெட்டா மட்டுமின்றி டுவிட்டர், ஸ்னாப்சேட், பின்ட்ரஸ்ட் ஆகிய சமூக வலைதளத்தின் பங்கு மதிப்பும் குறைந்து இருக்கிறது. ஏனென்றால் இளைய தலைமுறையை சேர்ந்தவர்கள் போட்டியாளர்களின் தளங்களை பயன்படுத்துவதே ஆகும். அத்துடன் ஆப்பிள் நிறுவனம் அதன் ஐஓஎஸ்சில் அமல்படுத்தியுள்ள தனிநபர் உரிமைகளின் மாற்றம், விளம்பர நிறுவனங்கள் பேஸ்புக், இன்ஸ்டாகிராமிலுள்ள பயன்பாட்டாளர்களை அளவிடுவதை கடினமாக்கி உள்ளது. இவையே 1000 கோடி டாலர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
தற்போது மார்க் ஜுக்கர்பெர்க் மெய்நிகர் தொழில் நுட்பத்தில் கவனம் செலுத்தி வருவதால் மெட்டா நிறுவனம் பிற சமூக வலைதளங்களுடனான போட்டியை குறைத்து உள்ளது. அதுமட்டுமின்றி டிக்டாக் நிறுவனம் இதுவரை இல்லாத அளவில் அதிவேகமாக வளர்ந்து வருவதும் பேஸ்புக்கின் பயனர்கள் குறைவதற்கு ஒரு காரணம் ஆகும்” என்று மெட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது.

Categories

Tech |