மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் முதல்வரை நேரில் சந்தித்து முறையிட்டுள்ளார்.
மதுரை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் 23 கோரிக்கைகள் அடங்கிய மனு ஒன்றை முதலமைச்சரிடம் நேற்று நேரில் சந்தித்து வழங்கினார். அந்த மனுவில் உள்ள கோரிக்கைகள் பின்வருமாறு, மதுரையில் புதிய தொழிற்பேட்டைகள் தொடங்கப்பட வேண்டும். மதுரையில் அதி நவீன தொலைத்தொடர்பு தொழில்நுட்ப பூங்காவை உருவாக்க வேண்டும். காமராஜர் பல்கலைக்கழகத்தில் சைடல் பூங்கா உருவாக்கப்பட வேண்டும். மதுரையில் உள்ள மத்திய சிறையை மதுரையைச் சுற்றியுள்ள புறநகர் பகுதிக்கு மாற்ற வேண்டும். மதுரையில் தமிழ் குறித்த அருங்காட்சியகம் துவங்கப்பட வேண்டும். மதுரையில் உள்ள வடக்கு நதி கரை சாலை விரிவு படுத்தப்பட வேண்டும். பழுதடைந்துள்ள மேயர் முத்து பாலத்தை சீரமைக்க வேண்டும்.
மதுரையில் மெட்ரோ ரயில் நிலையம் அமைப்பதற்கு துரித நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். வைகை உள்ளிட்ட நீர்நிலைகளில் கழிவுநீர் கலப்பதை உடனடியாகத் தடுக்கப்பட வேண்டும். அலங்காநல்லூர் பகுதியில் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான புதிய கலையரங்கம் ஒன்று திறக்கப்பட வேண்டும். மதுரையில் அதிக எண்ணிக்கையில் அரசு மற்றும் கலை கல்லூரிகள் உருவாக்கப்படவேண்டும். மற்றும் மதுரை கொட்டாம்பட்டியில் ஐடிஐ ஒன்று உருவாக்கப்பட வேண்டும். அலங்காநல்லூர் தேசிய சர்க்கரை காலை மீண்டும் இயக்கப்பட வேண்டும். அதற்காக அரசு 10 கோடி நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். மதுரை சர்வதேச விமான நிலையம் குறித்து மாநில அரசு மத்திய அரசுக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுக்க வேண்டும் என மொத்தம் 23 கோரிக்கைகள் அடங்கிய மனுவை அமைச்சர் சு.வெங்கடேசன் முதல்வரிடம் அளித்தார்.