Categories
தேசிய செய்திகள்

1 இல்ல 2 இல்ல…. பீட்சா நிறுவனம் ஊழியருக்கு ரூ.2.3 லட்சம் டிப்ஸ்?…. பின் நடந்த பரபரப்பு சம்பவம்….!!!!

அமெரிக்க நாட்டில் பீட்சா நிறுவனம் ஊழியருக்கு ஒரு வாடிக்கையாளர் ரூபாய்.2.3 லட்சத்தை டிப்ஸ் கொடுத்திருக்கிறார். இந்த புகைப்படங்கள் இணையத்தளத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது. அமெரிக்காவின் பென்ஸில் வேனியா மாகாணத்திற்கு உட்பட்ட ஸ்க்ரான்டான் நகரில் ஒரு பீச்டா நிறுவனம் இயங்கி வருகிறது. இவற்றில் எரிக்ஸ்மித் என்பவர் சாப்பிட வந்துள்ளார். அவருக்கு மரியானா லம்பார்ட் என்ற உணவக ஊழியர் பீட்சா பரிமாறி இருக்கிறார். உணவு உட்கொண்டதை அடுத்து அவருக்கு பில் கொடுக்கப்பட்டது.

அவற்றில் பீட்சாவுக்கான கட்டணத்துடன் உணவக ஊழியர் லம்பார்ட்டுக்கு ரூபாய்.2.3 லட்சம் (ரூ.3000 டாலர்) டிப்ஸாக கொடுக்கப்பட்டு உள்ளது. இதன் காரணமாக நெகிழ்ந்த லம்பார்ட் மிகுந்த மகிழ்ச்சியுடன் டிப்ஸைப் பெற்றுக் கொண்டுள்ளார். அவர் கடன் அட்டை (கிரெடிட் கார்ட்) வாயிலாக பணத்தை செலுத்தியுள்ளார். இதனால் பீட்சா நிறுவனம் ஊழியருக்கு பணமாக டிப்ஸ் பணத்தை கொடுத்துவிட்டு வங்கிக்கணக்கிலிருந்து மீட்டுக்கொள்ள முடிவுசெய்துள்ளது.

இந்நிலையில் மறுநாள்வந்த எரிக்ஸ்மித், டிப்ஸாக வழங்கிய பணத்தை திரும்பக் கேட்டுள்ளார். தவறுதலாக பெரிய தொகையை டிப்ஸாக கொடுத்து விட்டதாகவும், பணத்தை திரும்ப வழங்குமாறும் கோரியுள்ளார். அத்துடன் தன் கடன் அட்டை நிறுவனத்திடம் டிப்ஸ் பணத்தை பரிமாற்ற வேண்டாம் என்று நிர்பந்தித்துள்ளார். டிப்ஸ் பணத்தை வங்கிக்கணக்கில் பெற முடியாமல் கோபமடைந்த பீட்சா நிறுவனம், எரிக் ஸ்மித் மீது வழக்குதொடர்ந்துள்ளது.

Categories

Tech |