கேரளாவை சேர்ந்த பாம்பு பிடிப்பதில் வல்லவரான வாவா சுரேஷ் மருத்துவமனையில் கவலைக்கிடமான நிலையில் இருக்கிறார்.
கேரளா கோட்டயம் அருகே குறிச்சி கிராமத்தில் பிடித்த நாகப்பாம்பை வாவா சுரேஷ் பையில் போடும்போது அவரின் தொடையில் பாம்பு கடித்துள்ளது. இதையடுத்து அவர் கோட்டயம் மருத்துவமனையில் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். அரசு வேலை வேண்டாம் என கூறி மக்களுக்காக சேவை செய்து வரும் சுரேஷை இதுவரை 300 விஷப் பாம்புகள் கடித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.