தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக வெள்ளி சனி மற்றும் ஞாயிறு ஆகிய 3 நாட்களும் கோவில்கள் திறக்கப்படாது என்ற தமிழக அரசின் அறிவிப்பிற்கு பாஜகவினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனால் ஆளும் கட்சிக்கும், பாஜகவிற்கு இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. அந்தவகையில் கோவிலை திறக்குமாறு பாஜக சார்பாக நடத்தப்பட்ட போராட்டத்தில் பேசிய அண்ணாமலை, அடுத்த பத்து நாட்களில் கோவிலை திறக்காவிட்டால் திமுக அரசை ஸ்தம்பிக்க வைப்போம் என்று எச்சரிக்கை விடுத்தார்.
இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பேசிய அறநிலை துறை அமைச்சர் சேகர்பாபு, பாஜக போன்று 1000 பாஜக வந்தாலும் திமுக அரசை ஸ்தம்பிக்க செய்ய முடியாது. மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம் என்று கூறினார். மேலும் விழாக்கள் நடத்துவதற்கும், கோவில்களை திறப்பதற்கும் மத்திய அரசிடம் இருந்து கடிதம் வாங்கிக் கொடுத்தால் அதை உடனடியாக செயல்படுத்த நாங்கள் தயாராக இருக்கிறோம் என்று தெரிவித்தார்.