செவிலியர் ஒருவர் மருத்துவமனையில் உள்ள 8 குழந்தைகளை கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரிட்டனில் உள்ள மருத்துவமனை ஒன்றில் செவிலியராக பணியாற்றி வந்தவர் Lucy Letby என்ற இளம்பெண். இவர் 2018 மற்றும் 2019ம் வருடங்களில் ஏற்கனவே குழந்தைகளை கொன்றதற்காக கைதுசெய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து அப்பகுதி காவல்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், “செவிலியர் ஒருவர் கடந்த 2018ம் வருடம் 8 பிஞ்சுக் குழந்தைகளை கொலை செய்துள்ளார். மேலும் 6 குழந்தைகளை கொலை செய்ய முயன்றுள்ளார். எனவே சந்தேகத்தின் பேரில் அந்த செவிலியர் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
இதையடுத்து கடந்த 2019 ஆம் வருடம் அதே செவிலியர் மீண்டும் எட்டு குழந்தைகளை கொலை செய்து, ஆறு குழந்தைகளை கொல்ல முயன்றதாக சந்தேகத்தில் கைது செய்யப்பட்டார். இதில் மேலும் 3 குழந்தைகளை கொலை செய்ய முயன்றதாகவும் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டடது. இதைத்தொடர்ந்து தற்போது அவர் 8 குழந்தைகளை கொலை செய்துள்ளார். மேலும் 9 குழந்தைகளை கொல்ல முயன்றுள்ளார். இந்நிலையில் அவர் மீண்டும் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்” என்று தெரிவித்துள்ளார்.
இதுபோன்று, பிரிட்டன் மருத்துவமனையில் கடந்த 2015, 2014ம் வருடத்தில் ஜூன் மற்றும் ஜூலை இடையிலான காலத்தில் 15 குழந்தைகள் இறந்தது தெரியவந்துள்ளதையடுத்து கடந்த 2017 ம் வருடம் அதிகாரிகள் இது குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். இதையடுத்து இந்த வழக்கை 17 குழந்தைகள் இறப்பு மற்றும் 16 குழந்தைகள் மயக்கம் அடைந்த வழக்காக விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.