கொரோனா கால சட்ட ஒழுங்கு நிலைகளை கருத்தில்கொண்டு கீழ்காணும் நெறிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்று காவல் துறை நோட்டீஸ் அளித்துள்ளது.
சிகலா அவர்களின் வாகனத்திற்கு பின்பு 5 வாகனங்கள் மட்டுமே வர வேண்டும்.
அமுமுக கட்சியினர் இதர வாகனங்களில் பின் தொடரக் கூடாது, அப்படி வந்தால் அந்த வாகனங்கள் நிறுத்தப்படும்.
சசிகலா உட்பட யாரும் அதிமுக கொடியை பயன்படுத்த கூடாது, அப்படி செய்வது விதி மீறலாகும்.
ஒவ்வொரு வரவேற்பு இடத்திலும் உள்ள கூட்டத்தில் 10 சதவீத சீருடையணிந்த அமமுக தொண்டர்கள் நிறுத்தி கூட்டத்தை ஒழுங்குபடுத்த வேண்டும்.
பட்டாசு வெடிப்பதற்கும் பேண்ட் வாத்தியங்கள் இசைப்பதற்கு கண்டிப்பாக அனுமதி இல்லை.
கொடி, தோரணங்கள், பிளக்ஸ், பேனர்கள் அனுமதியின்றி வைக்கக்கூடாது, விதிமுறைகளை மீறும் பட்சத்தில் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும்.
என சசிகலா வருகைக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து கர்நாடகா – தமிழக எல்லையில் உள்ள கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்… கிருஷ்ணகிரி மத்திய மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழக செயலாளர் கே எஸ் அறிவழகனுக்கு நோட்டீஸ் கொடுத்துள்ளார்.