தமிழகத்தில் 30வருஷம் ஆட்சியில் இருந்தது அதிமுக தான் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பெருமிதம் கொண்டார்.
செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், அதிமுக பொன்விழா ஆண்டில் அடியெடுத்து வைக்கின்றது. உலகத்திலே எந்த ஒரு இயக்கத்திற்கும் இல்லாத ஒரு மிகப்பெரிய ஒரு சிறப்பு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு உண்டு. அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் என்கின்ற மாபெரும் இயக்கம் தோற்றுவிக்கப்பட்ட 50 ஆண்டுகளில் 30 ஆண்டுகாலம் ஆட்சியில் இருந்தது.
எந்த கட்சிக்கும் அந்த ஒரு வரலாறு கிடையாது. அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் மட்டும் தான் முப்பது ஆண்டு காலம் தமிழ்நாட்டை ஆண்ட ஒரே கட்சி.அதேபோன்று ஐந்து முதலமைச்சர்களை கண்டு என்று இருக்கின்ற மாபெரும் இயக்கம். பேரறிஞர் அண்ணா அவர்களுடைய கனவினையும், தந்தை ஈ.வே.ரா.பெரியாருடைய கனவினையும், லட்சியங்களையும் செயலாற்றியவர் பொன்மனச்செம்மல் புரட்சித் தலைவர் டாக்டர் எம்ஜிஆர்.
புரட்சித்தலைவர் மறைவுக்குப் பிறகு இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் கழகத்தை ஒரு எக்கு கோட்டையாக ஒன்றரை கோடி தொண்டர்கள் கொண்டிருக்கின்ற மாபெரும் இயக்கமாக மாற்றிக் காட்டினார். இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் கூட சட்டமன்றத்திலே தனக்குப் பின்னும் இந்த கட்சி நூறாண்டு காலம் தலைக்கும், வளரும், ஓங்கும் என சொன்னார்.
பொன்மனச்செம்மலுடைய தொலைநோக்கு பார்வை, அவர் சொன்ன சத்திய வார்த்தைகள், இதயதெய்வம் புரட்சி தலைவி அம்மா அவர்களின் தொலைநோக்குப் பார்வை, அவர் சொன்ன சத்திய வார்த்தைகளோடு இந்த இயக்கம் பொன்விழா கண்டுள்ளது.அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு எத்தனையோ சோதனைகளையும், இன்னல்களையும், துன்பங்களையும் தாங்கி வீர நடை போட்டு, வெற்றி நடை போட்டு மாபெரும் வெற்றிகளை பெற்று இருக்கின்றது. அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தை பொன்மனச்செம்மல் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் ஆரம்பிக்கும் போது பலர் ரத்தம் சிந்தி உருவாக்கினார்கள்.