வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி போராடும் விவசாய சங்க பிரதிநிதிகளுடன் மத்திய அரசு இன்று 11ஆம் கட்ட பேச்சுவார்த்தையில் ஈடுபடுகின்றது.
மூன்று வேளாண் சட்டங்களையும் முழுமையாக மத்திய அரசு ரத்து செய்ய வலியுறுத்தி விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம் என்பது கிட்டத்தட்ட 58வது நாளை எட்டி இருக்கிறது. இரண்டு மாதங்களை இந்த போராட்டம் நெருங்கி வருகிறது. இதனால் எல்லைகளில் பாதுகாப்பு காவல் துறையினரால் அதிகப்படுத்த பட்டிருக்கிறது. குறிப்பாக இன்றைய தினம் விவசாய சங்க பிரதிநிதிகளுடன் மத்திய அரசு 11ம் கட்ட பேச்சுவார்த்தையில் ஈடுபட இருக்கின்றது.
குறிப்பாக ஏற்கனவே கடந்த 10ம் கட்ட பேச்சு வார்த்தையின் போது மத்திய அரசு விவசாயிகளுக்கு ஒரு கோரிக்கையை முன்வைத்தது. இந்த சட்டங்களை நாங்கள் ஒன்றரை ஆண்டுகளுக்கு நிறுத்தி வைக்க தயாராக இருக்கிறோம். உங்களுடைய முடிவை பேச்சுவார்த்தையின்போது தெரிவியுங்கள் என்று தெரிவிக்கப்பட்டது. இந்த கோரிக்கை தொடர்பாக விவசாய சங்க பிரதிநிதிகள் கிட்டத்தட்ட மூன்று மணி நேரத்திற்கு மேலாக ஆலோசனையில் ஈடுபட்டனர்.
பின்னர் நேற்று இரவு அவர்கள் தெரிவிக்கையில், இந்த மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெறுவது மட்டும் தான் எங்களுடைய பிரதான இலக்கு. ஆனால் மத்திய அரசு ஒன்று முதல் ஒன்றரை ஆண்டுகள் வரை நாங்கள் நிறுத்தி வைக்க தயார் என சொல்கிறது. இந்த கோரிக்கையை நாங்கள் நிச்சயமாக ஏற்றுக் கொள்ள மாட்டோம். இன்று நடைபெறும் பேச்சுவார்த்தையின் போது நாங்கள் தெரிவிப்பது மூன்று வேளை சட்டங்களின் திரும்பப் பெறுங்கள். இல்லை என்றால் நிச்சயமாக எங்களுடைய போராட்டம் தொடர்ந்து நடைபெறும். உங்களுடைய கோரிக்கையை நாங்கள் ஏற்கமாட்டோம் என்று தற்போது விவசாயிகள் தெரிவித்திருக்கிறார்கள்.