மத்திய அரசு கொண்டு வந்த புதிய வேளாண் சட்டத்தை எதிர்த்து டெல்லியில் விவசாயிகள் போராடி வருகின்றன. இந்த போராட்டம் 300 நாட்களை கடந்து சென்று கொண்டிருக்கும் நிலையில் விவசாயிகள் போராட்டத்திற்கு பல மாநில அரசு ஆதரவு தெரிவித்துள்ளது.
இந்நிலையில் நாடு முழுவதும் செப்டம்பர் 27ஆம் தேதி முழு அடைப்புப் போராட்டம் அறிவித்துள்ள விவசாயிகளுக்கு ஆதரவாக கேரளாவில் முழு அடைப்பு நடைபெறும் என ஆளும் கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்துள்ளது. அன்றைய தினம் மத்திய அரசின் போக்கை எதிர்த்து போக்குவரத்து ஊழியர்க, வங்கி ஊழியர்கள் உள்ளிட்ட 100 அமைப்புகள் போராட்டத்தில் பங்கேற்க உள்ளன. ஆங்காங்கே ரயில் பஸ் மறியல் போராட்டம் நடைபெறும் என்றும் தெரிவித்துள்ளது.