Categories
தேசிய செய்திகள்

ஹேப்பி நியூஸ்…. 25 ஆயிரம் பேருக்கு அரசு வேலை…. பதவியேற்றவுடன் முதல்வர் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு…!!!

பஞ்சாப் மாநிலத்தின் சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் கடந்த 10ஆம் தேதி அன்று வெளியாகிள்ளது. அதில் ஆம் ஆத்மி கட்சியானது காங்கிரஸ் கட்சியை தோற்கடித்து ஆட்சியை பிடித்துள்ளது. இதை எடுத்து ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த பகவத்சிங் மான் முதலமைச்சராக பதவி ஏற்றுள்ளார்.

இந்நிலையில் பஞ்சாப் மாநிலத்தில் புதிதாக பொறுப்பேற்றுள்ள பகவத்சிங் மான் தலைமையில், ஆம் ஆத்மி அரசின் முதலாவது அமைச்சரவை கூட்டமானது நடைபெற்றது. அதில் 25 ஆயிரம் இளைஞர்களுக்கு அரசு வேலைகளை வழங்கப்படவுள்ளதாக முடிவு செய்யப்பட்டிருக்கிறது.

அதன்படி 25 ஆயிரம் அரசு வேலைகளுக்கான காலியிடங்களை நிரப்ப முடிவு செய்துள்ளது. இவற்றில் 10,000 போலீஸ் பணியிடங்களும் அடங்கும். மேலும் இது தொடர்பாக பஞ்சாப் முதல்வர் வெளியிட்டுள்ள வீடியோவில் தெரிவித்துள்ளதாவது, தகுதி அடிப்படையில் பணியிடங்கள் நிரப்பப்படும் எனவும் சிபாரிசு மற்றும் லஞ்சத்திற்கு இடம் கிடையாது.

மேலும் பாகுபாடு எதுவும் காட்டப் படாது என்றும்  கூறியுள்ளார். இவ்வாறு ஆம் ஆத்மி தேர்தல் பரப்புரையின் முதன்மை வாக்குறுதியான படித்த இளைஞர்களுக்கு அதிக எண்ணிக்கையில் அரசு வேலை என்ற வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. மேலும் இதுகுறித்த அறிவிப்புகள் ஒரு மாதத்தில் வெளியிடப்பட்டு, ஆள் தேர்வு தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |