Categories
தேசிய செய்திகள்

ஹேப்பி நியூஸ்!…. விமான டிக்கெட் விலை குறைப்பு?…. வெளியான சூப்பர் தகவல்….!!!!

இந்தியா, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகள் கொரோனா பெருந்தொற்றின் தாக்கம் குறைந்து வருவதால் சர்வதேச விமான பயண கட்டுப்பாடுகளை நீக்கியுள்ளன. இந்த நிலையில் சர்வதேச விமான டிக்கெட்டின் விலை 50 சதவீதம் வரை குறைய வாய்ப்பிருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச பயண கட்டுப்பாடுகளால் சுமார் இரண்டு ஆண்டுகளாக விமான டிக்கெட்டின் விலை இரண்டு மடங்கு உயர்ந்து காணப்பட்டது.

பல நாடுகளும் தற்போது கட்டுப்பாடுகளை நீக்கியுள்ளதால் சர்வதேச விமான சேவையின் எண்ணிக்கையை லுஃப்தான்ஸா குழுமத்தின் சுவிஸ் ஏர்லைன்ஸ் வரும் நாட்களில் இரட்டிப்பாக திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. அதேபோல் 17% அதிக விமானங்களை இயக்க சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் திட்டமிட்டிருப்பதாகவும், நூற்றுக்கும் மேற்பட்ட சர்வதேச விமானங்களை மீண்டும் தொடங்க இந்தியாவின் இண்டிகோ ஏர்லைன்ஸ் திட்டமிட்டிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Categories

Tech |