வீட்டுக் கடனுக்கான வட்டி குறைக்கப்படுவதாக எஸ்பிஐ வங்கி அறிவித்துள்ளது.
இந்தியாவின் மிகப்பெரிய வங்கிகளில் ஒன்றான ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கி வீட்டுக் கடன் உள்ளிட்ட மக்களுக்குப் பயன்தரும் பல்வேறு கடன்களை வழங்கி வருகின்றது. அதுமட்டுமல்லாமல் வாடிக்கையாளர்களுக்கு சலுகையும் அறிவித்து வருகின்றது. அந்த வகையில் எஸ்பிஐ வங்கியில் வீட்டுக் கடன் வாங்குபவர்களுக்கு வட்டியை குறைத்து தற்போது அறிவித்துள்ளது. எஸ்பிஐ விழா கால சலுகையாக வீட்டு கடன் வாங்குபவர்களுக்கு 6.7 குறைவான வட்டி விகிதத்தில் வீட்டுக் கடன் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது. இதற்கு முன்னதாக 75 லட்சத்திற்கு மேல் வீட்டுக் கடன் வாங்கியவர்களுக்கு 7.15 வழங்கப்பட்டிருந்தது.
தற்போது இந்த வட்டிக் குறைப்பின் மூலம் மாதந்தோறும் செலுத்தும் இஎம்ஐ தொகை குறையும். இதற்கு முன்பாகசம்பளதாரர்கள் மற்றும் சம்பளம் அல்லாதவர்கள் என்று வட்டி விகிதத்தில் மாற்றம் இருந்தது. சம்பளம் வாங்குபவர்களை விட சம்பளம் அல்லாதவர்களுக்கு வட்டி விகிதம் அதிகமாக இருக்கும். ஆனால் இந்த சலுகையின் மூலம் சம்பளம் அல்லாதவர்கள் கூடுதல் வட்டி செலுத்த வேண்டிய அவசியமில்லை. அது மட்டுமல்லாமல் செயல்பாட்டு கட்டணத்தையும் 100 சதவீதம் வரை தள்ளுபடி செய்துள்ளது. இந்த சலுகைகள் அனைத்தும் சிபில் ஸ்கோரை பொருத்தது என்று எஸ்பிஐ தெரிவித்துள்ளது.