Categories
தேசிய செய்திகள்

ஹேப்பி நியூஸ் மக்களே….! “கொரோனா 4வது அலை வராது”…. மூத்த மருத்துவ நிபுணர் தகவல் ….!!!

இந்தியா முழுவதும் கடந்த டிசம்பர் மாதம் கொரோனாவின் மூன்றாவது அலை வேகம் எடுக்க தொடங்கியது. இதனைத் தொடர்ந்து பிப்ரவரி மாதத்திலிருந்து வைரஸின் பரவல் குறையத் தொடங்கி தற்போது பாதிப்பு சரிந்து வருகிறது. இந்த நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் 4,000 க்கு கீழ் கொரோனா பாதிப்பு குறைந்து உள்ளது. இதனால் பல்வேறு கொரோனா கட்டுப்பாடுகள்  தளர்க்கபட்டுள்ளன. இதற்கிடையில் ஒரு தரப்பினர் கொரோன வைரஸ் மீண்டும் ஏற்படலாம் என்று கூறுகின்றனர்.

இந்த நிலையில் மூத்த மருத்துவ நிபுணரானர் மற்றும் ஆராய்ச்சி கவுன்சிலின் முன்னாள் தலைவரான டி ஜேக்கப் ஜான் கூறுகையில், “இந்தியாவில் கொரோனா வைரஸ் 4வது அலை ஏற்பட வாய்ப்பு இல்லை. கொரோனா வைரஸின் மூன்றாவது அலா முடிந்துவிட்டது. இதை உறுதியுடன் கூறலாம். மேலும் கொரோனா வைரஸ் எண்டமிக் கட்டத்தை மீண்டும் எட்டிவிட்டது. இதனைத் தொடர்ந்து கொரோனா வைரஸ் எதிர்பாராத வகையில் உருமாறி பரவாத வரையில் 4வது  அலை ஏற்படாது என்று உறுதியாக நம்பலாம்” என்று கூறியுள்ளார்

Categories

Tech |