கொரோனா பேரிடர் காலத்தில் மக்கள் அனைவரும் பொருளாதார ரீதியாக பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். சிறிய தேவைகளுக்குக் கூட பணத்தை புரட்டுவது சிக்கலாகிவிட்டது. அவசர கால கடன்களை பொறுத்தவரையில் நகைக்கடன் சிறந்தது. ஏனெனில், நகை கடன்களை உடனடியாக வாங்கிவிட முடியும். அது மட்டுமல்லாமல் செக்யூரிட்டி ஆவணங்கள் எதுவும் தேவை இல்லை. இந்நிலையில் இந்தியாவின் மிகப்பெரிய வங்கியான எஸ்பிஐ வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு நகை கடன் சலுகைகளை அறிவித்துள்ளது.
அதன்படி தங்க நகைகள் வங்கிகளால் விற்பனை செய்யப்படும், தங்க நாணயங்கள் ஆகியவற்றை வைத்து எஸ்பிஐ வங்கி நகை கடன் பெற முடியும். கடனுக்கு விண்ணப்பிக்கும் போது ஆவண வேலைகள் குறைவு. அதுமட்டுமல்லாமல் வட்டியும் குறைவு என்பது மிகச் சிறப்பாகும்.
எஸ்பிஐ யோனோ அப் மூலம் நகை கடனுக்கு விண்ணப்பித்தால் பிராசஸிங் கட்டணம் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும். நகை கடன், வட்டி பொருத்தவரை ஆண்டுக்கு 7.30 சதவிகிதம் முதல் தொடங்குகிறது. கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கான காலம் 36 மாதம் ஆகும்.
மேலும் நகைக்கடன் விண்ணப்பிக்க 2 போட்டோ, அடையாள அட்டை, முகவரி சான்று கல்வியற்ற விண்ணப்பதாரரக இருந்தால் சாட்சி கடிதம் போன்ற ஆவணங்கள் தேவைப்படும்.