சிங்கப்பூரில் இந்தியர்களுக்கு கூடுதல் தளர்வுகள் அறிக்கையை அந்நாட்டின் போக்குவரத்து துறை அமைச்சர் வெளியிட்டுள்ளார்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பெருந்தொற்றின் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு போடப்பட்டிருந்தது. மேலும் அனைவரும் கண்டிப்பாக தடுப்பூசி போடவேண்டும் என்ற நடைமுறையும் இருந்தது. தடுப்பூசி ஒன்றே மரணத்திற்கு எதிராக போராடும் ஆயுதமாக இருந்தது. இந்நிலையில் இந்தியாவின் எந்த ஒரு பகுதியில் இருந்தும் கொரோனா தடுப்பூசிகள் போட்டுக் கொண்டவர்கள் சிங்கப்பூருக்கு தாராளமாகச் செல்லலாம்.
அங்கே போன பிறகுதான் தனிமைப்படுத்துதலுக்கு அவசியம் இல்லை என அந்நாட்டின் போக்குவரத்து துறை அமைச்சர் எஸ் ஈஸ்வரன் அறிக்கை வெளியிட்டுள்ளார். மேலும் இந்தோனேசியா, மலேசியா, வியட்னாம், கிரீஸ் போன்ற நாடுகளில் இருந்து வரும் பயணிகளும் பயணக் கட்டுப்பாடுகள் நீக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.