Categories
மாநில செய்திகள்

ஹேப்பி நியூஸ்!…. அரசு பேருந்துகளில் பயணிப்பவர்களுக்கு…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!

திமுக அரசு தமிழகத்தில் ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்து மக்களுக்கு பல நல்ல திட்டங்களையும் அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில் தேர்தலில் வாக்குறுதி அளித்தபடி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெண்களுக்கு அரசு நகரப் பேருந்துகளில் இலவச பேருந்து பயண திட்டம் கொண்டு வந்தார். இந்த திட்டம் பெண்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. மேலும் இந்த திட்டமானது அமலுக்கு வந்ததில் இருந்து பெண்கள் அதிக அளவில் பேருந்துகளில் பயணம் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் பேருந்துகளில் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யவும், முறைகேடுகள் ஏற்படாமல் தடுக்கவும் சிசிடிவி கேமராக்கள் மாநகர பேருந்துகளில் பொருத்தப்பட்டுள்ளது. அதோடு மட்டுமில்லாமல் புதிதாக 4 ஆயிரம் பேருந்துகளை வாங்க தமிழக அரசு முடிவெடுத்துள்ளது. அதேபோல் மாற்றுத்திறனாளிகளுக்கான வசதிகளுடன் கூடிய பேருந்துகள் இயங்குவதை உறுதி செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் கடந்த 2016-ஆம் ஆண்டில் உத்தரவிட்டது.

அதன்படி புதிய பேருந்துகளை வாங்க அரசு முடிவு செய்துள்ளது. அதில் மாற்று திறனாளிகள் பயணம் செய்யக்கூடிய வசதிகளை 10% பேர் பேருந்துகள் கொண்டிருக்கும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. அதேபோல் பேருந்தில் பயணிக்கும் மாற்றுத்திறனாளிகள் மற்றும் அவரின் உதவியாளர்கள் இலவசமாக பேருந்துகளில் பயணம் செய்யவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

அதேசமயம் பேருந்து மேலாண் இயக்குனர்கள் மாற்றுத்திறனாளிகள் எங்கு நின்று கொண்டிருந்தாலும் பேருந்தை நிறுத்தி அவர்களை ஏற்றிச் செல்ல வேண்டும் என்றும் போக்குவரத்துத்துறை அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. அதோடு மட்டுமில்லாமல் பாகுபாடின்றி அனைத்து வகை மாற்றுத்திறனாளிகளும் 70 சதவீத கட்டணச் சலுகையில் பேருந்துகளில் பயணம் செய்யவும் அனுமதி வழங்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |