Categories
உலக செய்திகள்

ஹேண்ட் பேக்கில் சிறுநீர் கழித்த காதலன்… கடுப்பான காதலி நீதிமன்றத்தில் வழக்கு…. அதிரடி தீர்ப்பு….!!!!

தென்கொரியாவைச் சேர்ந்த 31 வயது காதலன் ஒருவர் கங்கனம்-கு குதியிலுள்ள காதலியின் வீட்டுக்குச் சென்றுள்ளார். அங்கு இருவரும் பேசிக் கொண்டு இருந்தனர். அப்போது இருவருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து வாக்குவாதம் முற்றி அது சண்டையாக மாறிவிட்டது. இதில் ஆத்திரமடைந்த காதலன் நேராக காதலியின் அறைக்குள் சென்று அவரது விலையுயர்ந்த லூயிஸ் உய்ட்டன் ஹேண்ட் பேக்கில் சிறுநீர் கழித்திருக்கிறார். இதன் காரணமாக காதலி கோபத்தின் உச்சிக்கு சென்றுள்ளார்.

அதன்பின் ரூபாய் 1.5 லட்சம் இருக்கும் தனது பேக்கில் சிறுநீர் கழித்ததற்காக நஷ்டஈடு கேட்டு காதலி நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்தார். அதனை தொடர்ந்து விசாரணையின்போது, தான் சிறுநீர் கழிக்கவில்லை எனவும் காதலியை வெறுப்பேற்றுவதற்காக நடித்தேன் என காதலன் கூறி இருக்கிறார். இருப்பினும் டி.என்.ஏ. பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் காதலன் பெண்ணின் ஹேண்ட் பேக்கில் சிறுநீர் கழித்தது உறுதியாகியது. அதன்பின் அந்த காதலன் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டதோடு, அபராதமாக 1,150 அமெரிக்க டாலர் (ரூ.91,634) விதிக்கப்பட்டது.

Categories

Tech |