சென்னையில் இருசக்கர வாகனம் ஓட்டுபவர்கள் ஹெல்மெட் அணிபவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதாக போக்குவரத்து காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.
சென்னையில் இருசக்கர வாகனம் ஓட்டுபவர்கள் ஹெல்மெட் அணிவது 72% இருந்து 86% ஆக அதிகரித்துள்ளதாக போக்குவரத்து காவல் துறை தகவல் தெரிவித்துள்ளது. ஆகஸ்ட் மாதத்தில் ஹெல்மெட் அணியாமல் சென்ற 1.29 லட்சம் பேர் மீது வழக்கு பதிவு செய்த நிலையில், ஹெல்மெட் அணிவது அதிகரித்துள்ளது. மேலும் ஜனவரி முதல் செப்டம்பர் 9 வரை சென்னையில் நிகழ்ந்த விபத்துகளில் உயிரிழந்தோரில் 74% பேர் ஹெல்மட் அணியாமல் சென்றவர்கள் எனவும் தெரிவித்துள்ளது.