உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட பீரங்கி எதிர்ப்பு ஏவுகணை செவ்வாய்க்கிழமை வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. ஹெலிகாப்டரில் இருந்து இரண்டாவது முறையாக செலுத்தப்பட்டு மிக உயரத்தில் வெற்றிகரமாக பரிசோதனை செய்யப்பட்டு இருக்கிறது. இந்த சோதனையை பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு நிறுவனம் இந்திய ராணுவம் மற்றும் இந்திய விமானப்படை போன்றவை கூட்டாக மேற்கொண்டுள்ளன. அடுத்தடுத்த நாட்களில் இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
தற்போது நடைபெற்ற சோதனை பல்வேறு தொலைவு மற்றும் உயரத்தில் நடத்தப்பட்டிருக்கிறது. அப்போது ஏவுகணை அதன் பீரங்கி இலக்கை மிகத் துல்லியமாக தாக்கியது. மேலும் இந்த ஏவுகணை சோதனையை மூத்த ராணுவ தளபதிகள் டிஆர்ஓ விஞ்ஞானிகள் பார்வையிட்டுள்ளனர். ஹெலிகாப்டரிலிருந்து ஏவி சோதனை விடப்பட்ட தொடர்ந்து இமேஜிங் இன்ப்ரா ரெட் சீக்கிரம் போன்றவை சிறப்பாக செயல்படுவது உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது. இதனையடுத்து ஹெலினா ஏவுகணைகள் ராணுவத்தில் சேர்க்கப்படுகின்றன.
முன்னதாக ராஜஸ்தான் மாநிலம் பொக்ரானில் இருந்து ஹெலினா ஏவுகணை சோதனை நடத்தப்பட்டுள்ளது. பாலைவனப்பகுதியில் அது தனது செயல் திறனை நிரூபித்துள்ளது. மூன்றாம் தலைமுறையைச் சேர்ந்த பீரங்கி எதிர்ப்பு ஏவுகணை ஆகும். இது நேரடியாகவும் உயரத்தில் இருந்து காக்கவல்லது அனைத்து வானிலை மற்றும் இரவு பகல் நேரம் எந்த நேரத்திலும் எதிரிகளின் தாக்குதலிலிருந்து வாகனங்களை தாக்கி அழிக்கும் வல்லமை படைத்தது.