Categories
தேசிய செய்திகள்

ஹெலிகாப்டரில் ஏற்பட்ட கோளாறு…. பள்ளி வளாகத்தில் விமானப்படை ஹெலிகாப்டர் தரை இறங்கியதால் பரபரப்பு…!!!

விமானத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக பள்ளி வளாகத்திலேயே ஹெலிகாப்டரை விமானப்படை தரையிரங்கியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. உத்தரபிரதேசத்தின் பிரயாக்ராஜில் இருந்து விமானப்படை தளத்தை நோக்கி சென்று கொண்டிருந்த இந்திய விமானப்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் ஒன்று நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது, விசிறியில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது.

இதன் காரணமாக பக்சார் மாவட்டத்தின் மணிப்பூரில் உள்ள உயர்நிலைப் பள்ளி வளாகத்தில் அந்த ஹெலிகாப்டர் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டது. இதனால் ஹெலிகாப்டரில் இருந்த பயணிகள் அனைவரும் உயிர் தப்பினர். பள்ளி வளாகத்தில் ஹெலிகாப்டர் தரையிரங்கியதால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Categories

Tech |