போதைப் பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட நபர் ஒருவர் ஹெராயின் என்பது தனக்குத் தெரியாது என்றும், அது கோதுமை அல்லது புளி என்றேதான் நினைத்து எடுத்துச்சென்றதாகக் கூறினார். இதனையடுத்து நீதிமன்றம் அந்த நபரை விடுவித்துள்ளது. முன்னதாக விசாரணை நீதிமன்றம் அந்த நபருக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை மற்றும் ரூ.1 லட்சம் அபராதம் விதித்தது. அந்த நபர் சென்னையில் இருந்து குவைத்துக்கு ரூ.1.377 கிலோ ஹெராயின் கடத்த முயன்றதாக அவர் மீது வழக்கு தொடரப்பட்டு தண்டனை விதிக்கப்பட்டது.
இச்சம்பவம் செப்டம்பர் 2014ல் நடந்தது. அந்த நபர், தனது நண்பர் கொடுத்த பார்சலை எடுத்துச் செல்லவே அஞ்சியதாகக் கூறினார். ஏனெனில் அதுதான் அவரது முதல் வெளிநாட்டுப் பயணம். வெங்கடேஸ்வர ராவ் பார்சலை கொடுத்தபோது அதில் கோதுமையும், புளியும் இருப்பதாகக் கூறியுள்ளார். மேலும் அந்தப் பார்சலைக் கொடுத்த நபருக்கும் வெங்கடேஸ்வர ராவுக்கும் நடந்த உரையாடல் அனைத்துமே வெங்கடேஸ்வர ராவின் அறியாமையை நிரூபிக்கும் வண்ணமே இருந்தது.