Categories
மாநில செய்திகள்

ஹெச்.ராஜா ஆவணங்களை தர வேண்டும்…. அமைச்சர் சேகர் பாபு….!!!!

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மையான தொகுதிகளில் வெற்றி பெற்று திமுக 10 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சியைப் பிடித்துள்ளது. அதன்பிறகு முதல்வராக பதவியேற்றுக் கொண்ட ஸ்டாலின், மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகிறார். அது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது. அதுமட்டுமல்லாமல் தமிழக அரசில் பல மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. கொரோனா பேரிடர் காலத்தில் தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில் தமிழகத்தில் ஒரு லட்சம் ஏக்கர் கோவில் நிலங்கள் ஆக்கிரமிப்பில் உள்ளதாக கூறும் எச்.ராஜா ஆவணங்களை தர வேண்டுமென அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். அவர் ஆவணங்களை கொடுத்தால் நிலங்களை கையகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். கோவில் சொத்துக்களை யார் அபகரித்தாலும் ஆண்டவன் தரும் தண்டனையை அனுபவித்தே ஆக வேண்டும். சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |