Categories
மாநில செய்திகள்

ஹிந்து கடவுள் பெயர்: வியாபாரம் செய்ய மாற்று மதத்தினர் கையிலெடுத்த புது டெக்னிக்….!!!!!

மாற்று மதத்தினர் சிலர், தங்களது பொருட்களை அதிகம் விற்பனை செய்ய வேண்டும் என்ற ஒரே நோக்கத்திற்காக ஹிந்து கடவுள் பெயர்களை பயன்படுத்த தொடங்கியுள்ளனர். இந்த போக்கு அண்மை காலமாக அதிகரிக்க துவங்கியுள்ளது. நாட்டில் பெரும்பாலாக உள்ள ஹிந்து நுகர்வோர்களை குறி வைத்து தங்களது வியாபாரத்தில் சில சமரசம் செய்து கொள்ள மாற்று மதத்தினர் தயாராகி இருக்கின்றனர். இதை தங்களது தொழிலில் புது உத்தியாக மாற்று மதத்தினர் பயன்படுத்தி வருகின்றனர்.

தங்களது உற்பத்தி பொருட்களுக்கு பெயர்வைக்க ஏராளமான வாய்ப்புகள் இருப்பினும், ஹிந்து கடவுளின் பெயர்களை மட்டும் பயன்படுத்தி வருமானம் ஈட்ட விரும்புகின்றனர். ஹிந்து உரிமையாளர்கள் தயாரிக்கும் பொருட்களை வாங்க தவிர்க்கும் சில மாற்று மதத்தினர், தங்களது பொருட்களுக்கு மட்டும் ஹிந்து கடவுள் பெயர்களை வைத்து விற்பது எவ்விதத்தில் நியாயம் என கேள்வி எழுப்புகின்றனர். ஹிந்து கடவுள் பெயரில் பொருட்களை தயாரிப்போர் உண்மையில் ஹிந்துக்களா என தெரிந்துகொள்ள சில வழிகள் இருக்கிறது.

இன்று தொழில்நுட்பம் பெரியளவில் வளர்ந்துள்ளது. சம்பந்தப்பட்ட நிறுவனங்கள், உற்பத்தியாளர்கள், பிராண்ட் உரிமையாளர்களின் பெயரை நுகர்வோர் சில நிமிடங்களில் கண்டுபிடித்துவிட முடியும். சில ஹிந்து நிறுவனங்களை, மாற்று மதத்தினர் (அல்லது) அவர்கள் கட்டுப்பாட்டிலுள்ள நிறுவனங்கள் வாங்கியுள்ளது. அந்நிறுவனங்களில் ஆன்லைன் வாயிலாக கட்டணம் செலுத்தும்போது, ரசீதில் உரிமையாளரின் பெயர் இருக்கும். அதன் வாயிலாக அந்நிறுவனத்தின் உரிமையாளர்கள் பற்றி அறிந்து கொள்ளலாம். ஆகவே நுகர்வோர்தான் விழிப்புடன் இருக்க வேண்டும்.

Categories

Tech |